உடையும் பாக்., வெடித்தது உள்நாட்டு கலவரம்..!

உடையும் பாக்., வெடித்தது உள்நாட்டு கலவரம்..!

மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததில் இருந்து தொடர்ச்சியாக இதை உலகளவில் பெரிய விவகாரமாக்க பாக்., பல முயற்சிகளை மேற்கொண்டுவந்தது ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்த நிலையில் இப்பொழுது உள்நாட்டு மக்களின் ஆதரவை நாடி "காஸ்மீர் அவர்ஸ்" எனும் பெயரில் தினமும் பொதுமக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் கோரிக்கை விடுத்தார் இம்ரான் ஆனால் பாக்., மக்களின் ஆதரவு இல்லாமல் அது தோல்வியில் முடிந்தது அதை தொடர்ந்து நேற்று செப்., 13 வெள்ளிக்கிழமை பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஒற்றுமை பேரணி நடத்த இம்ரான் கான் அழைப்புவிடுதிருந்த நிலையில் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த மக்கள் "நாங்களும் இணைவோம் இந்தியாவோடு" மற்றும் "பாகிஸ்தான் ராணுவமே வெளியேறு" என்பது போன்ற கோஷங்களை எழுப்பி இம்ரானை புறக்கணித்தனர்.இந்திய மக்கள் POK வை இந்தியாவோடு இணைக்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் POK மக்களும் அதற்கு பச்சைக்கொடி காட்டியிருப்பது இந்த விவாகரத்தில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. பொருளாதார நிலையில் பெரும் பின்னடைவை பாக்., சந்தித்துள்ள நிலையில் இக்கலவரம் உள்நாட்டு போருக்கு வழிவகுக்கும் என்று உலக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்