உத்திரபிரதேசத்தில்  தொகுதி பங்கீடு

உத்திரபிரதேசத்தில் தொகுதி பங்கீடு

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு உத்திர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் தொகுதி பங்கீடை முடிவு செய்திருக்கின்றன. அதன் படி உத்திரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளில்  மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் தலா 38 இடங்களில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்த உள்ளன. 2 இடங்களை மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கி உள்ளன. இது தவிர சோனியாகாந்தி எம்.பியாக உள்ள ரேபரேலி  மற்றும் ராகுல் காந்தி எம்.பியாக உள்ள  அமேதியில் தங்கள் வேட்பாளரை நிறுத்துவதில்லை என்றும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த தொகுதி பங்கீடு பற்றி மாயாவதியும் அகிலேஷ் யாதவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது மாயாவதி,"இந்த கூட்டணி நாட்டின் நன்மைக்காகவும் நாட்டு மக்களின் நன்மைக்காகவும் ஏற்படுத்தப்பட்டுள்ள கூட்டணி." என்று கூறினார். அவர் பாஜகவை ஏழைகள், தலித்களுக்கு எதிரான வகுப்புவாத கட்சி என்று சாடினார்.