உருதுவுக்கு  CUTOUT வு ..!     தமிழுக்கு  GETOUT  ஆ..?     அன்று எங்கே போனார்கள் போராளிகள்....?

உருதுவுக்கு CUTOUT வு ..! தமிழுக்கு GETOUT ஆ..? அன்று எங்கே போனார்கள் போராளிகள்....?

தமிழக அரசியல் கட்சிகள் உணர்வுகளை தூண்டி அரசியல் செய்வதையே தங்கள் தொழிலாக கொண்டுள்ளன. அதிலும் இவர்கள் மொழி ரீதியிலான பிரிவினை அரசியலில் தற்போது உச்சம் தொட்டுள்ளனர். 

மாண்புமிகு. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் இந்தி தினத்தன்று கூறிய வாழ்த்து செய்தியை திரித்து ஏதோ இந்தியை தான் இனி அனைத்து மக்களும் பேசவேண்டும் இந்தி பேசாத மற்றமொழி பேசும் மக்கள் அனைவரும் இரண்டாம்தர குடிமக்கள் போன்று நடத்தபடுவார்கள் என அவர்களின் வாய்க்கு வந்ததை பேசி தமிழக மக்களிடையே ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியே தேர்தல்களில் வெல்லலாம் என்று நினைக்கின்றனர்.  

ஆனால் தமிழக மக்கள் தற்போது விழித்துக்கொண்டுள்ளனர், இனியும் உணர்வுகளை தூண்டி அரசியல் செய்ய இயலாது வளர்ச்சியை பேசும் அரசியல் கட்சிகளே இனி தமிழகத்தில் கோலோச்சும்.  திராவிட கட்சிகள் எப்போதும் மொழி அரசியலில் இரட்டை நிலைப்பாடுடனே இருந்துள்ளன என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.  

சமீபத்திய உதாரணம் கடந்த மார்ச் மாதம் ஆம்பூர் பகுதியில் உள்ள இஸ்லாமிய மாணவர்கள் தங்களுக்கு முதல் மொழிப்பாடமாக தமிழுக்கு பதிலாக உருதுதான் வேண்டும் உருது மொழியில் தான் தேர்வு எழுதுவோம் என போராட்டம் நடத்தினர். அதில் வெற்றியும் பெற்றனர்.  அரசும் அதற்க்கு இசைந்து உருது மொழியை மொழிப்பாடமாக மாற்றியது. 

தமிழ் மொழியின் காவலர்களாக காட்டிக்கொள்ளும் சிலபேர் இதற்கு வாய் திறக்காமல் தங்கள் மொழி பற்றை மிக அழகாக வெளிப்படுத்தினர்.  இவர்களின் கைப்பாவையாகவே தமிழகத்தின் பல்வேறு செய்தி ஊடகங்கள் உள்ளன அவைகளும் செய்தியை திரித்தே வெளியிடுகின்றன தமிழை வாழவைப்போம் என கூறும் இவர்களின் ஆட்சிகளில் தமிழ் மிக வேகமாக செத்து கொண்டிருக்கிறது..!