உருவானது ஹிந்து வாக்கு வங்கி.. ஓட்டுக்கேட்டு வரக்கூடாது வீட்டு வாசல்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கடும் பயத்தில் கம்யூனிஸ்ட்கள்

உருவானது ஹிந்து வாக்கு வங்கி.. ஓட்டுக்கேட்டு வரக்கூடாது வீட்டு வாசல்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கடும் பயத்தில் கம்யூனிஸ்ட்கள்

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் வீடு முழுவதும் வாசல்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதில் எங்கள் வீட்டில் அனைவரும் ஐயப்பனை கும்பிடுபவர்கள் எனவே கம்யூனிஸ்ட் மற்றும் திமுகவினர் ஒட்டு கேட்டு வரவேண்டாம் என்ற வாசகம் உள்ளது. சபரிமலை விவகாரத்தில் இந்துக்களின் உணர்வை புண்படுத்தியதாக இந்தியா முழுவதும் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியது, குறிப்பாக கேரளா முழுவதும் போராட்டங்கள் வெடித்தது.

கேரளா மட்டுமல்லாமல் கேரளாவை தாண்டி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன ஆனால் அதனை பினராயி விஜயன் தலைமையிலான மாநில அரசு பெண்களை சபரிமலைக்குள் அழைத்தே தீருவேன் என்று யாருக்கும் தெரியாமல் அழைத்தே சென்றது. இதனால் ஐயப்ப பக்தர்கள் கடும் கோபம் அடைந்தனர் மேலும் தங்களது கோபத்தை தேர்தல் நாளில் வெளிப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். தற்போது மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் போட்டியிடுவதால் ஐயப்ப பக்தர்கள் ஒன்றிணைந்து தங்கள் வீட்டு வாசலில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.