உலகச்செய்திகள்

உலகச்செய்திகள்

* இலங்கையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்கரமசிங்கக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 117 உறுபினர்கள் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவிற்கு இந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

*சிங்கப்பூரில் கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய இந்திய வம்சாவளி கணவனுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 6 பிரம்படிகளும் தண்டனை வழங்கி உத்திரவிட்டுள்ளது.

* பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் உள்ள கிறிஸ்துமஸ் மார்கெட்டில் நேற்று முன் தினம் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை சாரமாரியாக சுட்டதில் 3 பேர் உயிரிழந்தனர், 12 பேர் படுகாயமடைந்தனர். போலீஸார் திருப்பி சுட்டத்தில் காயமடைந்த மர்ம நபர் தப்பியோடி விட்டான். அவன் சந்தேகத்துக்குரிய பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளவன் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

*மலேஷியாவில் புகழ் பெற்ற பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டு தோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் தைப்பூசத்தை முன்னிட்டு மலேஷியாவிற்கு இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி மலேஷியா, கம்போடியா, மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு விமான சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலாக்கள் குறித்த விவரங்களை 9003140718, 9003140682, 9003024169 என்ற மொபைல் எண்களிலும் www.irctctourism.com என்ற இணைய தளத்திலும் அறிந்து கொள்ளலாம்.