உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் துவங்கியது. மாநில அமைச்சர் உதயகுமார் போட்டியை கொடியசைத்து துவக்கி  வைத்தார்.  இதில் 1400  காளைகளும் 848 மாடு பிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். 1500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போட்டியில் பங்கேற்கும் மாடுகளும், வீரர்களும் கடுமையான மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னரே போட்டிக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

போட்டியில் வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழக முதலமைச்சர் சார்பில் ஒரு காரும், சிறந்த மாட்டிற்கு துணை முதலமைச்சர் சார்பில் ஒரு காரும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமானோர் அலங்காநல்லூரில் குவிந்துள்ளனர்.