உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம்

உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம்

உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் தமிழ்நாட்டில் கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள உதயம்குளக்கரை என்ற ஊரில் உள்ள  பிரசித்தி பெற்ற செங்கல் மகேஷ்வர சிவ பார்வதி கோவிலில் நிறுவப்பட்டுள்ளது. 111.2 அடி உயரம் கொண்ட இந்த சிவலிங்கத்தை உருவாக்க 6 ஆண்டுகளும்,  10 கோடி ரூபாய் செலவும் பிடித்துள்ளது. 

இந்த சிவலிங்கம் எட்டு நிலைகளை கொண்டதாக உருவாக்கபட்டுள்ளது. சிவலிங்கத்தின் உள்ளே செல்ல குகை போன்ற அமைப்பும் ஒவ்வொரு தளத்திலும் தியான மண்டபம், பரசுராமர், அகத்தியர் ஆகியோர் தவம் செய்வது போலவும் பல தெய்வ உருவங்களோடும் சிற்ப வடிவங்களோடும் கலைநுணுக்கத்துடன் உருவாக்கப்படுள்ளது. சிவ லிங்கத்தின் கீழ் தளத்தில் பக்தர்கள் அபிஷேகம் செய்ய சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. சிவலிங்கத்தின் எட்டாம் நிலையில் சிவபார்வதி கைலாயத்தில் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிவலிங்கம் சிலை உலகில் மிக உயரமான சிவலிங்கம் என்று தேர்வாகி இந்தியா புக்காப் ரெக்காட்டில் இடம்பிடித்து உள்ளது. இதற்கான சான்றிதழை அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷாகுல்ஹமீது தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட பின் ஆலய நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். அந்த நிகழ்ச்சியில் கேரள பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜகோபாலன்  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த சிவலிங்கம் வரும் சிவராத்திரியன்று திறக்கப்பட உள்ளது.