உலகிலேயே மிக சிறிய செயற்கைக்கோளுடன்  பி.எஸ்.எல்.வி சி44

உலகிலேயே மிக சிறிய செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி சி44

தமிழக மாணவர்கள் குழு தயாரித்துள்ள ‘கலாம்சாட்’ என்ற, உலகின் மிக குறைந்த எடையுள்ள (34 கிராம்) செயற்கைக் கோளுடன் பி.எஸ்.எல்.வி சி44 ராக்கெட் நாளை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுன்ட் டவுன் இன்று துவங்கியது.

இந்த ராக்கெட், ‘கலாம்சாட்’ செயற்கைகோளுடன் 'மைக்ரோசாட்-ஆர்' செயற்கைக்கோளையும் தாங்கி செல்ல இருக்கிறது..

புவி ஆய்வு மற்றும் கண்காணிப்புக்காக மைக்ரோசாட் - ஆர் என்ற இமேஜிங் செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக் கோள் 690 கிலோ எடை கொண்டது. நாட்டின் எல்லைப் பகுதிகளை கண்காணிப்பது இதன் முக்கிய பணியாகும். இதில் 3டி கேமராக்கள், லேசர் கருவிகள் உட்பட அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இரு வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் இந்த இரு செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்பட உள்ளன. இதற்கேற்ப, ராக்கெட்டின் பிஎஸ் 4 இன்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகில் முதல்முறையாக இந்தியா இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.