உலக அரங்கில் சந்தி சிரித்த பாகிஸ்தான் அரசின் முட்டாள் தனம் ..!

உலக அரங்கில் சந்தி சிரித்த பாகிஸ்தான் அரசின் முட்டாள் தனம் ..!

சமீபத்தில் பாகிஸ்தான் செனட்டர் ரகுமான் மாலிக், ட்விட்டரில் ஐக்கிய நாடுகள் சபையை குறிப்பிட்டு பேசுவதற்கு பதிலாக UNO என்ற விளையாட்டின் அதிகாரபூர்வ பக்கத்தை குறிப்பிட்டு, காஷ்மீர் விவகாரம் குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் பேசியிருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகி வரும் நிலையில் அடுத்த உச்சகட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.


ஆபாச நடிகர் ஜான் சின் மருத்துவமனையில் இருப்பது போன்ற ஒரு காட்சியில், ஒரு பெண் அவரை அனைத்துக்கொண்டு அழுகிறார். இந்த காட்சி ட்விட்டரில் பதிவிடப்பட்டு, “காஷ்மீர் துப்பாக்கிச்சூட்டில் இவரது கண்கள் பறிபோய்விட்டது. உங்கள் ஒரு லைக் ஒரு பிரார்த்தனைக்கு சமம் என்று பதிவிடப்பட்டிருந்தது. இதனை பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசித் ரீ-ட்விட் செய்துள்ளார். ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபைக்கு (UN) பதிலாக UNO விளையாட்டை டேக் செய்த சம்பவத்தின் சர்ச்சை அடங்காத நிலையில், ஆபாச நடிகர் கட்டிலில் இருக்கும் காட்சியை, காஷ்மீரோடு தொடர்புபடுத்தி காண்பித்துள்ளது பாகிஸ்தான் அரசின் நிலையை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.


இப்படி பல போலி வீடியோக்கள் பாகிஸ்தான் தரப்பில் இருந்து பரவவிடப்பட்டு, இந்தியாவில் பிரிவினை ஏற்படுத்த முயற்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.