உலக சாம்பியன்ஷிப் குத்துசண்டை இந்தியா அசத்தல்

உலக சாம்பியன்ஷிப் குத்துசண்டை இந்தியா அசத்தல்

உலக சாம்பியன்ஷிப் குத்துசண்டை போட்டிகள் ரஷியாவின் எக்டரின்பர்க் நகரில் நடைபெற்று வருகின்றது.  நேற்று நடந்த காலிறுதி ஆட்டங்களில் அமித் பங்கல் மற்றும் மனிஷ் கௌஷிக் ஆகிய இருவரும் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். 

இதன் மூலம் உலகக்கோப்பையில் இந்தியா பதக்கம் வெல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இவ்வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகளுக்கு இருவரும் தகுதி பெற்றுள்ளனர்.