உலக முதலீட்டாளர்கள் மாநாடு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு துவங்கியது. இதனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கையை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில்  250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் தொழில் பொருட்காட்சியும் நடக்கிறது. 

நாளை நடக்கும் 2ஆவது நாள் மாநாட்டில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார். மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உரையாற்றயிருக்கிறார்.  இந்த மாநாட்டின் போது ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.