உள்துறை அமைச்சரை சந்திக்கும் மம்தா

உள்துறை அமைச்சரை சந்திக்கும் மம்தா

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவுள்ளார்.  மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள மம்தா பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசி வருகின்றார்.

அதன் ஒரு பகுதியாக இன்று அமித் ஷாவை சந்திக்கவுள்ளார்.  சந்திப்பின்போது மம்தா பல்வேறு கோரிக்கைகளை முன்வைப்பார் என கூறப்படுகிறது.  

இருதலைவர்களின் சந்திப்பு அரசியல் அரங்கில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்டுகின்றது.நேற்று மம்தா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது