ஊடுருவல்காரர்களை வாக்கு வங்கியாக பயன்படுத்துகிறது காங்கிரஸ்

ஊடுருவல்காரர்களை வாக்கு வங்கியாக பயன்படுத்துகிறது காங்கிரஸ்

வங்கதேசத்திலிருந்து வடகிழக்கு மாநிலங்களில் ஊடுருவியவர்களை காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கிக்காகப் பயன்படுத்துகிறது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டினார்.

இது குறித்து அமைச்சர் கூறியதாவது: ஊடுருவல்காரர்களுக்கு நிரந்தர இடம் அளிக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. இதன்மூலம், அவர்களை வாக்கு வங்கியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது.அருணாசலப் பிரதேசத்தில் சக்மா அகதிகள் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நிரந்தரமாக குடியமர்த்தப்பட்டனர். வங்கதேசத்தில் இருந்து வந்த அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கியதை அருணாசல் மக்கள் கடுமையாக எதிர்த்தனர் என்றார் கிரண் ரிஜிஜு. இது மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. மேகாலயம், நாகாலாந்து, மிஸோரம், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் ஊடுருவல்காரர்கள் பிரச்னை உள்ளது என தெரிவித்தார்.