"ஊழலை ஒழிப்பதே தமது அரசின் முக்கிய குறிக்கோள் "

"ஊழலை ஒழிப்பதே தமது அரசின் முக்கிய குறிக்கோள் "

விவசாயம், பால் உற்பத்தி மற்றும் எஃகு உற்பத்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நாடு முன்னேறியுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் திரு நரேந்திர மோடி பேசுகையில், தனது அரசு நேர்மைக்கும் வெளிபடைத்தன்மைகும் பெயர் பெற்ற அரசு என்றும்,  ஏழைகளின் மீது அக்கறை கொண்டுள்ள அரசு என்று தெரிவித்தார்.

"ஊழலை ஒழிப்பதே தமது அரசின் முக்கிய குறிக்கோள்" என்றும் சவால்களை சந்திக்க அரசு தயங்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வேலை இல்லா திண்டாட்டம் பெருகி இருப்பதாக கூறிய  குற்றச்சாட்டை மறுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு துறைகளில் கோடிகணக்கான வேலைவாய்ப்புகள் உருவக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.