ஊழல் மட்டுமே நடந்தது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் - இல. கணேசன்

ஊழல் மட்டுமே நடந்தது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் - இல. கணேசன்

காங்கிரஸ் கட்சி என்றாலே ஊழல் தான் நினைவுக்கு வரும், அக்கட்சி ஆட்சியில் ஊழல் மட்டுமே நடைபெற்றது.காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியை மீட்க வேண்டும். காஷ்மீரில் ஒரு அங்குலம் இடத்தைகூட விட்டு கொடுக்கக் கூடாது என்பது தான் பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாடு. ஆனால், பிரதமர் மோடியை ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து வருகிறார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஊழல்கள் மட்டுமே நடந்துள்ளன. ஆனால், பாஜக ஆட்சியில் மக்களுக்கு நலன் பயக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்தார்.