எதிர்கட்சிகள் கோழைத்தனமாக நாட்டை ஆண்டுள்ளன - பிரதமர் நரேந்திர மோடி

எதிர்கட்சிகள் கோழைத்தனமாக நாட்டை ஆண்டுள்ளன - பிரதமர் நரேந்திர மோடி

இலங்கையில், மக்கள் ஈஸ்டர் திருநாளை கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்தியாவில், 2014க்கு முன், என்ன நிலைமை?  மும்பை, புனே, ஐதராபாத், வாரணாசி, அயோத்தியா, ஜம்மு என, நாட்டின் பல்வேறு இடங்களிலும், குண்டு வெடிப்பு நிகழ்ந்தன. இதற்கு காங்கிரஸ் அரசு, என்ன நடவடிக்கை எடுத்தது? இரங்கல் கூட்டம் நடத்தி, பாகிஸ்தான் எங்கள் மீது தாக்குதல் நடத்தியது என, கண்ணீர் விட்டு கதறி அழுதது.

இதை மாற்றிக் காட்டியது, பா.ஜ., அரசு. நம்மை சீண்டிய பயங்கரவாதிகளின் கூடாரத்திற்குள் நுழைந்து, பாரபட்சமின்றி, அவர்களை முழுவதுமாக அழித்தது.

'பயங்கரவாதத்தை ஒழிக்க, துணிச்சலான நடவடிக்கைகளை பா.ஜ., அரசு எடுத்துள்ளது. ஆனால், 70 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட எதிர்கட்சிகள், கோழைத்தனமாகவே செயல்பட்டுள்ளன' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.