எதிர்க்கட்சிகளின் பொய்கள் அம்பலம்

எதிர்க்கட்சிகளின் பொய்கள் அம்பலம்

ரஃபேல் ஒப்பந்தம் குறித்த தலைமை கணக்கு தணிக்கையாளர்(சிஏஜி) அறிக்கை மாநிலங்களவையில் புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.  அந்த அறிக்கையில், இந்தியா-பிரான்ஸ் இடையே முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மேற்கொண்ட போர் விமான ஒப்பந்தத்தை விட, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ரஃபேல் போர் விமானங்களின் விலை மதிப்பு 2. 86 சதவீதம் குறைவு என்று கூறப்பட்டிருந்தது. 

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், உச்சநீதிமன்ற தீர்ப்பு, சிஏஜி ஆகியவை தவறு என்றும், காங்கிரஸில் உள்ள குடும்பத்தினர் சொல்வதுதான் சரியென்றும் பேசினர். ஆனால் தற்போது சிஏஜி அறிக்கை மூலமாக காங்கிரஸ் மற்றும் மற்ற எதிர்க்கட்சிகள் கூறிய அனைத்து பொய்களும் அம்பலமாகியுள்ளன. வாய்மையே வெல்லும் . உண்மை எப்போதும் நிலைநாட்டப்படும். நாட்டு மக்களுக்கு எப்போதும் பொய்யான தகவல்களை அளித்து வந்த அவர்களை ஜனநாயகம் எப்படி தண்டிக்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.