என்னடா இது காமரேட்டுகளுக்கு வந்த சோதனை!!!

என்னடா இது காமரேட்டுகளுக்கு வந்த சோதனை!!!

சபரிமலை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை தான் செயல்படுத்துகிறோம், பெண்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவது தவறு என்றெல்லாம் காரணம் காட்டி சபரிமலைக்கு மாற்று மத பெண்களையும், தெய்வ நம்பிக்கை இல்லாத பெண்களையும் சகல பந்தோபஸ்தோடு சபரிமலைக்கு அழைத்து சென்று புரட்சி செய்தது கேரள கம்யூனிஸ்ட் அரசு. 

சபரிமலைக்கு செல்பவர்கள் அருகில் இருக்கும் வாவர் மசூதிக்கும் செல்ல வேண்டுமாம். அது காலம் காலமாக உள்ள ஐதீகமாம். அது தான் சமய நல்லிணக்கமாம். அப்படியென்றால் சபரிமலைக்கு செல்லும் பெண்கள் வாவர் மசூதிக்குள்ளும் செல்லலாமா? என்று கேட்டால் அதற்கு பதிலில்லை. சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம். ஆனால், சபரிமலைக்கு செல்லும் ஆண்கள் மட்டும் தான் வாவர் மசூதிக்கு செல்லலாம். சபரிமலை ஐதீகத்தை தகர்க்கலாம். ஆனால், வாவர் மசூதி ஐதீகத்தை விடாமல் கடைபிடிக்க வேண்டும். இது தான் மத சார்பின்மை.

ஆனால், தமிழ்நாட்டிலிருந்து இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 3 பெண்களும், 2 ஆண்களும் வாவர் மசூதிக்குள் நுழைய முயன்றிருக்கிறார்கள். திருப்பூரை சேர்ந்த சுசீலா தேவி, ரேவதி, மற்றும் நெல்லையை சேர்ந்த காந்திமதி ஆகியோரே அந்த பெண்கள். அவர்களை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் செய்தது சரியா? அல்லது கேரள போலீஸார் கைது செய்தது சரியா? என்று மக்கள் சிந்தித்த வண்ணமுள்ளனர்.