எல்லையில் பாகிஸ்தான் படைகள் குவிப்பு

எல்லையில் பாகிஸ்தான் படைகள் குவிப்பு

பாகிஸ்தான் ராணுவம் தன் படைகளை ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் குவித்துள்ளது.   பாகிஸ்தான் ராணுவம் 2000  க்கும்மேற்பட்ட படைவீரர்களை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் குவித்துள்ளது.  இந்திய ராணுவம் இதை தீவிரமாக கண்காணித்து வருகின்றது.  

இந்திய ராணுவ உயர் அதிகாரி கூறுகையில் எத்தகைய தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயார் என கூறியுள்ளார்.  காஷ்மீர் விவகாரத்தில் தோல்வி அடைந்தபின் பதற்றத்தை அதிகரிக்கவே இத்தகு செயல்களில் ஈடுபடுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.