எல்லோரும் இந்நாட்டு மன்னர்

எல்லோரும் இந்நாட்டு மன்னர்

ஜனவரி 26, 1950,  உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தனக்கென ஒரு அரசியலமைப்பை உருவாக்கி அந்த  அரசியலமைப்பு சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும். நாளை நாட்டின் 70வது குடியரசு தின விழா  கொண்டாடப்பட உள்ளது.  இதனையொட்டி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வானொலி வாயிலாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் இன்றிரவு 7 மணிக்கு உரையாற்ற உள்ளார். 

நாளை தலைநகர் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா கேட் பகுதியில் உள்ள இந்திய போர் வீரர்களின் நினைவிடமான அமர் ஜோதிக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

பின்னர், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றிவைத்து குடியரசு தின அணிவகுப்பை  பார்வையிடுவார். கடந்த ஆண்டு நாட்டிற்கு மிக பெரிய சேவை புரிந்த படை வீரர்களுக்கு விருதுகளையும், பதக்கங்களையும் அவர் வழங்குவார். இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரம்போசா கலந்து கொள்ள உள்ளார். 

தமிழக தலைநகர் சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பை பார்வையிடுவார். சிறந்த காவலர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளன.

NewsTN வாசகர்களுக்கு தனது குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.