எல்லோரையும் சாமி என்றழைக்க வைத்தவர் ஐயப்ப சாமி -  ம.பாண்டியராஜன்

எல்லோரையும் சாமி என்றழைக்க வைத்தவர் ஐயப்ப சாமி - ம.பாண்டியராஜன்

கடந்த செப் 11 அன்று, ஆஸ்திக சமாஜத்தில், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் நடைபெற்ற "ஸ்ரீ ஐயப்ப தர்ம பிரச்சார ரத யாத்திரை" துவக்க விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அதில் அவர் பேசியதாவது என் மண், என் கோவில், என் தர்மம், என் நீர்நிலை, என் குடும்பம் ஆகிய உணர்வுகளை வலுப்படுத்த, சைவம், வைணவம், சாக்தம் பிரிவுகளைக் கடந்து, மாலை போட்ட 6 கோடி மக்களை ஒருவரை ஒருவர் ‘சாமி’ என்று அழைக்க வைத்த ஐயப்பசாமியின் அறப்பரப்புரைப் பயணத்தை துவங்கிவிப்பதில் பெருமை கொள்கிறேன் என்றார் !