எழும்பூர் - கொல்லம் ரயில் சேவை தொடக்கம்

எழும்பூர் - கொல்லம் ரயில் சேவை தொடக்கம்

சென்னை - கொல்லம் இடையே பாரம்பரிய ரயில் சேவையான கொல்லம் மெயில் கடந்த 1904-ஆம் ஆண்டு முதல் இயங்கியது. இதன் பழைய எண்களாக 101/102 இருந்தது. மீட்டர் கேஜ் பாதையான இதனை அகலப்பாதையாக்கும் பணிக்காக கடந்த 2000-ஆம் ஆண்டில் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு, 19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னை எழும்பூர்-கொல்லம் இடையே தினசரி ரயில் சேவை தொடங்கியுள்ளது. சென்னை எழும்பூர் - கொல்லம் இடையே தினசரி ரயில் சேவை திங்கள்கிழமை தொடங்கியது. இதற்கு பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். 

இந்த ரயில் எழும்பூரில் இருந்து நாள்தோறும் மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு கொல்லத்தை சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து தினசரி முற்பகல் 11.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு எழும்பூரை வந்தடையும். இந்த ரயில் தமிழக-கேரள மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.