ஐசிசிக்கு பிசிசிஐ எழுதவுள்ள கடிதம் - உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு தடை

ஐசிசிக்கு பிசிசிஐ எழுதவுள்ள கடிதம் - உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு தடை

2019 உலகக் கோப்பைப் போட்டியில் ஜுன் 16 அன்று இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் சமீபத்திய காஷ்மீர் தற்கொலைப்படைத் தாக்குதலையடுத்து இந்த ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அரசின் முடிவைப் பொறுத்தே இந்த ஆட்டம் நடைபெறுமா இல்லையா என்று சொல்லமுடியும் என ஐபில் தலைவர் ராஜிவ் சுக்லா கூறியுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரத்தை முன்வைத்து உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பாகிஸ்தானை அப்புறப்படுத்தவேண்டும் என்று ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுதவுள்ளது. தொடர் தீவிரவாதச் செயல்களில் பாகிஸ்தான் ஈடுபடுவதால் பாகிஸ்தான் அணி உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கத் தடை விதிக்கவேண்டும் என்று நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய், பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜொஹ்ரிக்கு தனிப்பட்டமுறையில் கடிதம் எழுதியுள்ளார்.