ஐயப்ப பக்தர்களின் பரிதாப நிலை - மனித உரிமைகள் ஆணையம் தலையீடு

ஐயப்ப பக்தர்களின் பரிதாப நிலை - மனித உரிமைகள் ஆணையம் தலையீடு

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் வீம்பும், கெடுபிடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். தங்குவதற்கு நல்ல இடம் கூட கிடைக்காமல் சுகாதாரமற்ற இடங்களில் பூஜை பொருட்களுடன் தங்கும் அவல நிலையம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. 

இந்த விஷயம் மனித உரிமைகள் ஆணையத்தின் கவனத்திற்கு சென்றுள்ளது. எனவே, கேரள மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் இன்று சபரிமலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. மேலும், சபரிமலை சன்னிதானம்,பம்பா, நிலக்கல் ஆகிய இடங்களில் கடும் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும், இவற்றை களைந்து பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் போலீஸ் டிஜிபி ஆகியோருக்கு கேரள மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.