ஐயப்ப பக்தர்கள் குடியிருக்கும் வீடு - திமுக கூட்டணி ஓட்டு கேட்டு வர வேண்டாம்

ஐயப்ப பக்தர்கள் குடியிருக்கும் வீடு - திமுக கூட்டணி ஓட்டு கேட்டு வர வேண்டாம்

'இது, அய்யப்ப பக்தர்கள் குடியிருக்கும் வீடு. தி.மு.க., - கம்யூ., கட்சிகளுக்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம்' என்ற நோட்டீசை, திருப்பூரில், பக்தர்கள் தங்களது வீட்டு முன் ஒட்டி வருகின்றனர்.

அய்யப்பன் கோவில் விவகாரத்தில், கம்யூ., கட்சியினர் மீது, தமிழக மக்கள் எதிர்ப்பு காட்ட துவங்கியுள்ளனர்.பல்வேறு மாவட்டங்களில், 'தி.மு.க., - காங்., - கம்யூ., கூட்டணியினர், எங்களிடம் ஓட்டு கேட்டு வராதீர்கள்' என, எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.திருப்பூர் சாமுண்டிபுரம், வளையங்காடு உட்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல வீடுகளில், 'அய்யப்ப பக்தர்கள் குடியிருக்கும் வீடு. தி.மு.க., - கம்யூ., கட்சிகளுக்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம்' என, நோட்டீஸ் அச்சடித்து ஒட்டியுள்ளனர்.

இதேபோல் மதுரையிலும், விருதுநகரிலும் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக ஐயப்ப பக்தர்கள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.