ஐராவதம் மகாதேவன் காலமானார்

ஐராவதம் மகாதேவன் காலமானார்

தமிழகத்தை சேர்ந்த பிரபல தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் நிபுணர் ஐராவதம் மகாதேவன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88. தமிழ் பிராமி எழுத்துக்களுக்கும் சிந்து சமவெளி நாகரீக எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து தெரியப்படுத்தியவர் திரு.மகாதேவன். சங்க காலம், சங்க கால தமிழ் ஆகியவற்றில் குறிப்பிடதக்க அவரது ஆராய்ச்சி தமிழின் தொன்மையையும், பெருமையையும்  உலகிற்கு எடுத்து கூறின. 

இந்திய ஆட்சி பணியில் இருந்த அவர், பின்னர் தினமணி பத்திரிக்கையில் சில ஆண்டுகள் பணியாற்றினார். 

இவரது ஆராய்ச்சிகளுக்காகவும், தொல்லியல் சேவைகளுக்காகவும் 2009ம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவித்தது.