ஐ.நாவில் காஷ்மீர் விவகாரத்தால் இந்தியாவுக்கே பயன்..!

ஐ.நாவில் காஷ்மீர் விவகாரத்தால் இந்தியாவுக்கே பயன்..!

பாகிஸ்தான் அரசானது ஐ.நா சபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினால் அது இந்தியாவுக்கே பயனளிக்கும் என ஐ.நாவுக்கான நிரந்தர இந்திய  தூதர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார்.  ஐ.நாவின் பொது சபையில் 27 ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசவுள்ளார் அவர் காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவார் என எதிர்பாக்கப்படுகிறது.   

இது குறித்து கருத்து தெரிவித்த அக்பருதீன்  இந்திய பிரதமரும் அதே நாளில் தான் பொதுச்சபையில் பேசவுள்ளார்.  அப்போது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிகழும் மனித உரிமைமீறல்கள் மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு குறித்து பேசுவார். அதனால் காஷ்மீர் விவகாரத்தால் இந்தியாவே பயனடையும் என கருத்து தெரிவித்துள்ளார்.