ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் - இந்தியாவுக்கு நிரந்தர இடம்

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் - இந்தியாவுக்கு நிரந்தர இடம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று இந்தியா, பிரேசில், ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டாக வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தங்களுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என இந்த 4 நாடுகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதைத் தொடர்ந்து, இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் நாடுகள், தற்காலிக உறுப்பினர்கள் நாடுகள் ஆகியவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இதுதான் மிகவும் முக்கிய சீர்திருத்தமாகும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தத்தின்போது, இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக்க வேண்டும். இதேபோல், ஆப்பிரிக்க மக்களின் பிரதிநிதித்துவத்தை பூர்த்தி செய்யும் வகையில், இந்த சீர்திருத்தம் இருத்தல் வேண்டும் என பிரான்ஸ் தூதர் பிரானாய்ஸ் டெல்டேர் செய்தியாளர் பேட்டியில் கூறினார்.