ஒடிஸா காங்கிரஸ் எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார்

ஒடிஸா காங்கிரஸ் எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார்

ஒடிஸா மாநிலத்தில் 20 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த எம்எல்ஏ பிரகாஷ் பெஹெரா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில்  பாஜகவில் இணைந்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்துவதற்கு அவரது தலைமையிலான அரசு மேற்கொண்ட முடிவு, எனது தொகுதியில் உள்ள இளைஞர்களை மிகவும் கவர்ந்துள்ளது. காங்கிரஸ் மேலிடம் என்னை புறக்கணித்ததால், அக்கட்சியில் இருந்து விலகினேன் என்றார் அவர்.