ஒற்றைத் தலைமைக்கு ஒரு அவசரமும் இல்லை  - அதிமுக ஆலோசனை கூட்டம்

ஒற்றைத் தலைமைக்கு ஒரு அவசரமும் இல்லை - அதிமுக ஆலோசனை கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. வழக்கம் போல சாதாரண கூட்டம் தான் என்றும் ஒற்றை தலைமையைப் பற்றி எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். கட்சியை வழிநடத்த ஒற்றை தலைமை தேவைப்படுவதாக அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கருத்து தெரிவித்திருந்தார். 


இது தொடர்பாக விவாதம் எழுந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10:30 மணியளவில் ஆலோசனை கூட்டம் துவங்கியது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


ஒன்றரை மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் பகல் 12 மணியளவில் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன நடைபெற்ற 


மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு அதிமுக தொண்டர்களுக்கு கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்க சிறப்புடன் பணியேற்று மாறும் வரும மற்றொரு தீர்மானம் கேட்டுக் கேட்டுக்கொண்டுள்ளது. அதிமுக தொடர்ந்து மக்கள் நலப் பணிகளில் ஈடுபட உறுதி ஏற்பதாகும் ஆலோசனை கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.