ஓசூர் மற்றும்  நாகர்கோவில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த மசோதா

ஓசூர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த மசோதா

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில், நாகர்கோவில் மற்றும் ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் நாகர்கோவில் மற்றும் ஓசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்கிறார். 

இதனால் தமிழகத்தில் ஏற்கனவே 12  மாநகராட்சிகள் உள்ளன. ஓசூர் மற்றும் நாகர்கோயில் நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு 14   மாநகராட்சிகளாக   மாற்றியமைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.