ககன்யான் திட்டம் அமைச்சரவை ஒப்புதல்

ககன்யான் திட்டம் அமைச்சரவை ஒப்புதல்

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின உரையின்போது, ககன்யான் திட்டம் குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த திட்டத்தின் மூலம் 2022ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் அறிவித்திருந்தார். இதன் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய 4 ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த  ககன்யான் திட்டத்திற்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று  ஒப்புதல் அளித்துள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 3 இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி 7 நாட்கள் வரை தங்கியிருக்கச் செய்யும் ககன்யான் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை மத்திய சட்ட  அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.