கங்குலியின் சாதனையை சமன் செய்தார் புஜாரா

கங்குலியின் சாதனையை சமன் செய்தார் புஜாரா

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அடிலைடில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அப்படி ஒன்றும் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தவில்லை எனினும், அணியின் சேத்தேஷ்வர் புஜாரா 5தாவது விக்கெட்டில் களமிறங்கி இந்தியாவை சரிவிலிருந்து காப்பாற்றினார்.231 பந்துகளில்  123 ரன்கள் எடுத்தார். இது அவரது 16வது சதமாகும். இதன் மூலம் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலியின் சாதனையை சமன் செய்திருக்கிறார் புஜாரா. புஜாராவிற்கு சக வீரர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்துள்ளது.