'கஜா' பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு

'கஜா' பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு

தமிழகத்தில் 'கஜா' புயல் தாக்கிய டெல்டா மாவட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நேரில் ஆய்வு செய்தார்.  நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், புஷ்பவனம், கோவில்பட்டு, திருத்துறைப்பூண்டி முதலான 12 இடங்களை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார். பின்னர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் வழங்கினார். பின்னர், திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளை அவர் ஆய்வு செய்தார்.