'கஜா' பாதிப்புகளை கணக்கெடுக்க மத்திய குழு

'கஜா' பாதிப்புகளை கணக்கெடுக்க மத்திய குழு

சமீபத்தில் தமிழகத்தை தாக்கிய 'கஜா' புயல் டெல்டா மாவட்டங்களை சூறையாடியது. புயல் பாதித்த இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிச்சாமி தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 'கஜா' புயல் நிவாரண நிதியாக 15000 கோடி ரூபாய் ஒதுக்கவேண்டும் என்றும்,   உடனடி நிவாரணமாக ரூபாய் 1500 கோடி ஒதுக்கித் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

பிரதமரும் புயல் பாதிப்புகளை கணக்கெடுக்க மத்திய குழு விரைவில் தமிழகம் அனுப்பி வைக்கப்படும் என்றும். அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நிவாரண நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.