'கஜா' பாதிப்புகளை மதிப்பிட மத்திய குழு இன்று வருகை

'கஜா' பாதிப்புகளை மதிப்பிட மத்திய குழு இன்று வருகை

தமிழக டெல்டா மாவட்டங்களை தாக்கிய 'கஜா' புயல் நிவராண நிதி கேட்டு தில்லியில் பிரதமரை சந்தித்தார் தமிழக முதல்வர் பழனிச்சாமி. அப்போது, புயல் பாதிப்புகளை மத்திய குழு மதிப்பீடு செய்து நிவாரண நிதி ஒதுக்கப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார். அதன்படி விவசாயம், சாலை போக்குவரத்து,விவசாயிகள் நலன், நீர்வளத்துறை, ஊரக வளச்சித்துறை முதலிய துறைகளை சேர்ந்த 7 நிபுணர்கள் அடங்கிய மத்திய குழு இன்று சென்னை வந்தனர். 

இவர்கள் மூன்று நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில் புயல் பாதித்த இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்வார்கள். முன்னதாக இன்று  அவர்கள் தமிழக முதல்வர் பழனிச்சாமி, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார்கள். பின்னர்,திருச்சி, புதுக்கோட்டை வழியாக புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்க்கொள்வார்கள்.