'கஜா' பாதிப்புகள் களத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள்

'கஜா' பாதிப்புகள் களத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள்

சமீபத்தில் தமிழகத்தை தாக்கிய 'கஜா' புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி. நாகை ரயில் நிலையம் பலத்த சேதமடைந்துள்ளது. அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு நிவராண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நாகை ரயில் நிலையத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இன்னமும் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் சீராகவில்லை. நேற்று தான் வேதாரண்யம் பகுதிக்கு  செல்ல முடிந்திருக்கிறது. இன்று கிராமங்களுக்கு செல்ல முடிகிறது. அங்கே நிவாரண பணிகளுக்காக கீழ் கண்ட பொருட்களும் உதவிகளும் தேவைப்படுவதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

குடி தண்ணீர்.  
அரிசி 10 கிலோ பை 2000
மெழுகுவர்த்தி           50000
தீப்பெட்டி                     10000
தார்ப்பாய்                     5000
பாய்                                5000
துண்டு                           3000
போர்வை                     2500
கொசுவர்த்தி               5000
துணிசோப்                  2000
பிஸ்கட்         
மெடிக்கல் கிட்

இது தவிர சாலையில் விழுந்துள்ள மரங்களை வெட்டுவதற்கு மரம் வெட்டும் இயந்திரம் 10  தேவை. இத்துடன், சேவை செய்ய முன் வரும் தொண்டர்கள் மற்றும் பண உதவியும் தேவைப்படுகிறது. 

 
உதவ முன் வருபவர்கள்  நாராயணன்  9443618482
                                              கிருஷ்ணராஜ் 9442442862

ஆகியோரை அந்தந்த தொடர்பு எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆர்.எஸ்.எஸ்  அமைப்பின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.