'கஜா' புயல் பாதித்த பகுதிகளில் நிர்மலா சீதாராமன்

'கஜா' புயல் பாதித்த பகுதிகளில் நிர்மலா சீதாராமன்

'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு செய்தார். பின்னர், பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர் பேசினார். அப்போது அவர், நாட்டிற்கே சோறு போடும் டெல்டா மக்கள் தன்னம்பிக்கை இழக்க கூடாது என்றும் மத்திய மாநில, அரசுகள் அவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக கூறினார். 

மேலும் அவர் மக்களிடையே பேசுகையில்

புயலால் வீடு இழந்தவர்களுக்கு பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்ட உதவிகள் செய்யப்படும்.

தென்னை மரங்களை இழந்தவர்களுக்கு தென்னங்கன்றுகள் இலவசமாகத் தரப்படும். தமிழகத்தில் தென்னங்கன்றுகள் பற்றாக்குறையாக இருந்தால் அண்டை மாநிலங்களில் இருந்து வரவழைத்து தரப்படும்.

பயிர் காப்பீட்டை பொறுத்தவரையில் அதை தற்சமயம் மாநில அரசே கட்டிவிட்டு பின்னர், விவசாயிகளின் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று ஆலோசனை கூறியிருக்கிறேன். 

என்று கூறினார்.