'கஜா' முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள்

'கஜா' முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள்

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல் நாகைப்பட்டினத்திலிருந்து 217கீமி தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 17கீமி வேகத்தில் நாகை கரையை நெருங்கி வருகிறது. இது இன்றிரவு  8 மணியிலிருந்து  11 மணிக்குள் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரையை கடந்த பின்னர் உள் மாவட்டங்கள் வழியாக அரபிக்கடலை சென்றடையும் என்றும் அப்போது தமிழக உள் மாவட்டங்களிலும், கேரளம் மற்றும் கர்நாடகத்திலும் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் 'கஜா' புயலை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நாகை,தஞ்சாவூர்,திருவாரூர்,ராமநாதபுரம், புதுக்கோட்டை,கடலூர், காரைக்கால், ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுள்ளது.

இன்று நடக்கவிருந்த அண்ணா பல்கலைகழக தேர்வுகள், மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்படுள்ளன.

தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுள்ளவர்களை தங்க வைக்க சமுதாய நல கூடங்கள், பள்ளி கூடங்கள் ஆகியவை நிவாரண முகாம்களாக செயல்பட தயாராக வைக்கப்பட்டுள்ளன.

இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 7 மாவட்டங்களில் பேருந்துகளை இயக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சில ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புயல் கரையை கடக்கும் போது முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும், எனவே மருத்துவமனைகள் உயிர் காக்கும் உபகரணங்களை இயக்க தேவையான டீசல் கையிருப்பில் வைத்திருக்குமாறும், அதே போல் தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்குமாறும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளன.

அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் மக்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்க டீசல் கையிருப்பு வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருகிறார்கள்.

தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை முன்னதாகவே வீட்டிற்கு அனுப்பும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புயல் கரையை கடக்கும் போது பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்றும், செல்பி எடுக்க முயல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

மீனவர்கள் தங்கள் படகுகளையும், வலைகளையும் பத்திரப்படுத்துமாறும், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளபட்டிருக்கிறார்கள்.

மொத்தத்தில் 'கஜா' புயலை எதிர்கொள்ள அரசு இயந்திரம் தயார் நிலையில் உள்ளது.