'கஜா' வால் 6 மாவட்டங்களில்  நாளைக்கு ஸ்கூல்  லீவு

'கஜா' வால் 6 மாவட்டங்களில் நாளைக்கு ஸ்கூல் லீவு

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரி கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. மணிக்கு 60கி.மி வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல் கடலூர் பாம்பன் இடையே நாளை கரையை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், நாகை, கடலூர், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரிகுட்பட்ட காரைக்காலிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டிணம் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் நேரடியாக மீனவ கிராமங்களுக்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.  கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

கடலூர் மாவட்டத்திலும் ஆட்சியர் அன்புச்செல்வன் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார். நாளை கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.