கடலூர் மாவட்டத்தில் முப்பெரும் விழா

கடலூர் மாவட்டத்தில் முப்பெரும் விழா

கர்னத்தம் கிராமத்தில்  ஆர்.எஸ்.எஸ். நடத்திய பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகாவில் கர்னத்தம் கிராமத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கர்னத்தம் கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பாக சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றம் கடந்த 26 ஆண்டுகாலமாக செயல்பட்டு வருகிறது. இம்மன்றத்தின்  27 ஆம் ஆண்டு தொடக்க விழாவும் சுவாமி விவேகானந்தர் பிறந்த தின விழா  மற்றும் பொங்கல் விளையாட்டு விழாவும் சேர்த்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

காலை முதல் மாலைவரை பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாலை பரிசளிப்பு விழா நடைபெற்றது. பரிசளிப்பு விழாவில் உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமத்தை சேர்ந்த  யத்தீஸ்வரி அசல பிரியா அம்பா அவர்கள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்.  விழாவில் கிராம மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.