கட்டாய மதமாற்றம் - நீதிமன்றத்தில் பாதுகாப்பு கோரிய பாகிஸ்தான் ஹிந்து சிறுமிகள்

கட்டாய மதமாற்றம் - நீதிமன்றத்தில் பாதுகாப்பு கோரிய பாகிஸ்தான் ஹிந்து சிறுமிகள்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ரவீனா(13) மற்றும் ரீனா(15) ஆகிய இரு சிறுமிகளும் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது அவர்களது இல்லத்தில் இருந்து கடத்தப்பட்டனர். அதையடுத்து அவர்களுக்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஆண்களுடன் கட்டாயத் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த காட்சிகள் பதிவான விடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அந்த இரு சிறுமிகளின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், குழந்தைத் திருமணம் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வந்தனர்.  

இந்நிலையில், அந்த இரண்டு சிறுமிகளும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவால்பூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முறையிட்டனர். இதனிடையே, அந்த சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு உதவி செய்ததாக கூறப்படும் நிகா கிவான் மற்றும் திருமணம் செய்து கொண்ட இரு மணமகன்களின் உறவினர்கள் ஆகியோரை பாகிஸ்தான் காவல் துறை கைது செய்துள்ளது.