கட்டுக்கட்டாக பணம் - துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை

கட்டுக்கட்டாக பணம் - துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், அதிகபட்சமாக, 70 லட்சம் ரூபாய் வரை, தேர்தல் செலவு செய்யலாம் என, தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், வேலுார் தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர், கதிர் ஆனந்தின் தந்தையும், அக்கட்சியின் பொருளாளருமான, துரைமுருகன் வீட்டில், பணம் பதுக்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள், நேற்று முன்தினம், தீவிர சோதனை நடத்தினர். அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது. இந்நிலையில் வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான கல்வி அறக்கட்டளை வளாகத்தில் நடந்த வருமான வரி சோதனையில்  கட்டுக் கட்டாக பணம் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.