கட்டுப்பாட்டை இழந்த சந்திராயன் ஆனால் தகவலை திரட்டும் இஸ்ரோ

கட்டுப்பாட்டை இழந்த சந்திராயன் ஆனால் தகவலை திரட்டும் இஸ்ரோ

நிலவின் தென்துருவத்தை ஆராய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் இன்று அதிகாலை நிலவின் பரப்பை அடைவதாக இருந்தது, ஆனால் நிலவை அடைய 2.1 கிலோ மீட்டர் இருக்கும்போது தன் கட்டுப்பாட்டை இழந்தது.  

இருப்பினும் விக்ரம் லேண்டர் சிக்னல் இழந்த பகுதியில் இருந்து தகவல்களை ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தலைவர்   சிவன் தெரிவித்துள்ளார்.  இந்திய பிரதமர் மோடி 'நம்பிக்கை இழக்க வேண்டாம் உங்கள் கடின உழைப்பு வீண்போகாது என இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் கூறியது  குறிப்பிடத்தக்கது.