கணினிகளை கண்காணிக்க அனுமதி - குடிமக்களின் அந்தரங்க உரிமையை மீறமாட்டோம்

கணினிகளை கண்காணிக்க அனுமதி - குடிமக்களின் அந்தரங்க உரிமையை மீறமாட்டோம்

அனைத்து கணினிகளையும் கண் காணிக்க 10 புலனாய்வு அமைப்பு களுக்கு அனுமதி வழங்கியிருந் தாலும் சட்டத்தை மதிக்கும் குடிமக் களின் அந்தரங்க உரிமையை மீறக்கூடாது என அறிவுறுத்தி இருக் கிறோம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், நாட்டில் உள்ள எந்த ஒரு கணினியிலும் உள்ள தகவலை இடைமறிக்க, கண்காணிக்க உளவுத் துறை, சிபிஐ உள்ளிட்ட மத்திய அரசின் 10 புலனாய்வு அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இது குடிமக் களின் அந்தரங்க உரிமையை மீறும் செயல் என பல்வேறு கட்சி கள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இது ஏற் கெனவே பின்பற்றும் நடைமுறை தான். கணினிகளை கண்காணிக்க தேவை ஏற்பட்டால் அதற்குரிய சட்ட விதிமுறைகளை கண்டிப் பாக பின்பற்றும்படி புலனாய்வு அமைப்புகளை அறிவுறுத்தியிருக் கிறோம் என்று மத்திய அரசு விளக்கமளித்தது.

ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, இணையதள சுதந்திர கூட்டமைப்பு உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் துள்ளனர். இதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மத்திய அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 69-வது பிரிவின்படி, கணினிகளை கண்காணிக்க 10 அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை ஆகியவற்றை கருத்தில்கொண்டுதான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.