கண்டன ஆர்ப்பாட்டங்கள்

கண்டன ஆர்ப்பாட்டங்கள்

சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் நிம்மதியாக சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. அவர்கள் கேரள அரசால் பல கெடுபிடிகளுக்கு உள்ளாகிறார்கள்.

இதனை கண்டித்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாளை 21.11.2018 புதன் கிழமை அன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் மாலை 4மணிக்கு ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பிலும் மாலை  3 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில்,   சபரிமலை பாதுகாப்பு இயக்கம்  சார்பிலும்  ஸ்ரீ சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் காலை 10.30 மணிக்கு மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் அருகிலும்,  ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில்  மாலை 4.30மணிக்கு காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் ஓட்டல் சரவணபவன் அருகிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.