கனடாவில் பொங்கல் கொண்டாட்டம்

கனடாவில் பொங்கல் கொண்டாட்டம்

உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கனடாவில் உள்ள தமிழர்களால் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கலந்து கொண்டார். மண் பானையில் பொங்கலுக்கு அரிசி இட்டு விழாவில் பங்கு கொண்ட கனடா பிரதமர், தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். கனடாவின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு முக்கியமானது. உலகின் பல கலாசாரங்களிலிருந்து பலவற்றை நாம் கற்று அவற்றை கொண்டாட வேண்டும். என்று கூறிய அவர், ஜனவரி மாதத்தை கனடாவில் தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.