கருணாநிதி சிலை டிச.16ல் திறப்பு

கருணாநிதி சிலை டிச.16ல் திறப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உருவச்சிலை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ளது. இது குறித்து  திமுக தலைமை நேற்று (நவ.15) வெளியிட்ட அறிக்கை:

5 முறை முதல்வராக இருந்து தமிழகத்துக்கு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி தந்து, உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் கொலுவீற்றிருக்கும் கருணாநிதியின் உருவச்சிலை, திமுக தலைமையகமான அறிவாலய முகப்பில் நிறுவப்பட உள்ளது. புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும் - கருணாநிதியின் சிலையும் ஒரே இடத்தில் அருகருகே அமைய உள்ளன. டிசம்பர் 16ம் தேதி நடக்கும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.