கரூரில் கிடைக்கிறது சோயா மோர்

கரூரில் கிடைக்கிறது சோயா மோர்

கரூரில் பழைய பைப்பாஸ் ரோடில் " ஹோட்டல் நளன் " என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார் குருஜி என்பவர். இவரது உணவகத்தில் என்ன சிறப்பு என்றால், இங்கே இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், தானியங்கள் ஆகியவையே சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும், மிருகங்களிடமிருந்து பெறப்படும் பால் மற்றும் பால் பொருட்கள் பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்துவதால் சோயா பாலிலிருந்து தயாரிக்கப்படும் மோர் தான் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே சோயா மோர் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஒரே ஹோட்டல் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.