கர்நாடகா, ஆந்திரா,கேரளாவிலும் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு

கர்நாடகா, ஆந்திரா,கேரளாவிலும் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு

மக்களவைத் தேர்தலில் கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டுமென அந்த மாநிலங்களைச் சேர்ந்த பாஜகவினர் கேட்டுக் கொண்டனர். அதன்படி, அவர்களது கோரிக்கையை ஏற்று மூன்று மாநிலங்களிலும் போட்டியிடும் அந்தக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க அதிமுக முடிவு செய்துள்ளது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.